கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மொசாம்பிக்கில் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஐஎஸ் போராளிகள் தலையை துண்டித்து படுகொலை செய்து வருவதை Save the Children அமைப்பு வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளதுமொசாம்பிக்கின் வடக்கு மாகாணமான கபோ டெல்கடோவிலே இக்கொடூர சம்பவங்கள் அரங்கேறி வருகிறது
2017ல் இஸ்லாமிய கிளர்ச்சி தொடங்கியதில் இருந்து 2,500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 7,00,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர் போராளிகள் ஐஎஸ் கு ழுவுடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதுமாகாணத்தை விட்டு இடம்பெயர்ந்த கு டும்பங்கள் இந்த கொடூர சம்பவங்களை பகிர்ந்ததாக Save the Children அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது
கோர சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட தாய் கூறியதாவது, சம்பவத்தன்று இரவு எங்கள் கிராமம் தாக்கப்பட்டு மற்றும் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டதுஇதன் போது நான் எனது நான்கு குழந்தைகளுடன் வீட்டில் இருந்தேன் நாங்கள் தப்பிக் முயன்ற போது போராளிகள் எனது மூத்த மகனை பிடித்து தலையை துண்டித்து கொன்றுவிட்டனர்
நாங்களும் கொல்லப்படுவோம் என்ற பயத்தில் ஏதுவும் செய்யவில்லை என துயரத்தை பகிர்ந்துள்ளார்இதே போல் மற்றொரு பெண்ணும் தனது 11 வயது தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை Save the Children அமைப்புடன் பகிர்ந்துள்ளார்