மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சியினை சேர்ந்த நட்சத்திர வேட்பாளர், குளித்துக்கொண்டிருந்த நபரிடம் வாக்கு சேகரித்த புகைப்படம் வைரலாகிவருகிறது.
இந்தியாவில் தமிழகத்தைப் போலவே மேற்கு வங்கத்திலும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அனைத்து வேட்பாளர்களும் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், பிரபல பெங்காலி நடிகரான கிரண் சாட்டர்ஜியை Kharagpur Sadar சட்டமன்ற தொகுதியில் நட்சத்திர வேட்பாளராக பா.ஜ.க.வினர் முதல்முறையாக களமிறக்கியுள்ளனர்.
பா.ஜ.க.வின் இளம் வேட்பாளரான Hiran Chatterjee தனது தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.
நேற்று அவர் கரன்பூர் சதர் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, தனது வீட்டின் வெளிப்புறத்தில் நிம்மதியாக குளித்துக் கொண்டிருந்த ஒரு நபரையும் விடாமல் வாக்கு சேகரித்துள்ளார்.
அப்போது அந்த நபருடன் Hiran புகைப்படமும் எடுத்துள்ளார். உடம்பு முழுக்க சோப்பு நுரையுடன் இருந்த அவரும் கொஞ்சமும் கூச்சப்படாமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.
இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி காட்டுத்தீ போல் பரவிவருகிறது.