உணவுப்பொருள்களில் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்ட உணவு முட்டை என கருதப்படுகிறது.
இது வளரும் குழந்தைகளுக்கு பெரிதும் உதவி செய்கிறது.
தினமும் ஒரு முட்டையை குழந்தைகள் கட்டாயம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
சத்துக்கள்
ஊட்டச்சத்து மட்டுமல்லாது உடலுக்கு தேவையான வைட்டமின், கனிமச்சத்துக்கள் போன்றவையும் முட்டையில் உள்ளன.
தசை வளர்ச்சி, மூளை நினைவாற்றல், நோய் எதிர்ப்பு சக்தி, பார்வை திறன் மேம்பாடு போன்ற பல விடயங்களுக்கு முட்டை உதவி செய்கிறது.
ஒரு ஆண்டுக்கு ஒரு நபர் 180 முட்டையாவது குறைந்தபட்சம் சாப்பிட்டு இருக்க வேண்டும்.
இதில் நாட்டு கோழி முட்டைகள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்கின்றன என்று கூறப்படுகிறது.