பொருளதார சிக்கலினால் குடும்பஸ்மர் ஒருவர் நீர்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்பத்தியுள்ளது.
இச்சம்பவமானது இன்று மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் தலவாக்கலை, வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தைச் சேர்ந்த சுப்பையா சுப்பிரமணியம் (வயது 62) என்பவர் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பியதையடுத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.