கிளிநொச்சி ஊரியான் பகுதியில் சட்டவிரோதமான முறையில் அகழ்ந்து களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட 200 கியூப் மணல் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வெளி இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த நிலையில் கிளிநொச்சி ஊரியன் பகுதியில் சுமார் 200 கியூப்க்கு மேற்பட்ட மணல் சட்ட விரோதமாக அகழ்ந்து குவிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரின் விசேட நடவடிக்கை மூலம் தடுத்து நிறுத்தப்பட்டு குறித்த மணல் இரானுவ பாதுகாப்பில் இதுவரை நாட்களும் வைக்கப்பட்டிருந்தது.
மாவட்ட அரச அதிபரின் ஏற்பாட்டில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக வழக்கு தாக்கல் செய்யும் பொருட்டு மணலை பொலிஸ் நிலையத்தில் களஞ்சியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.