கோவிலுக்கு செல்ல வாகனம் கழுவிய நபர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை தனது குடும்பத்தோடு புளியம்பொக்கணை கோவிலுக்கு செல்வதற்காக வாகனத்தை மின்சார சுத்திகரிப்பு இயந்திரத்தினால் கழுவியபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சுத்திகரிப்பு இயந்திரத்தின் மின் ஒழுக்கினாள் மின்சாரம் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான 39 வயதுடைய இராசலிங்கம் ஜெயபாலன் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.