டி20 போட்டிக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி கடந்தவாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் புதிய ஜெர்சியை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தரம்சாலாவில் உள்ள மைதானத்திற்கு ஹெலிகாப்டரில் ஜெர்சியை தொங்கவிட்டு கொண்டு வரும் காணொளி வெளியாகியுள்ளது.
ஆரஞ்ச் மற்றும் நீல நிறத்தில் இடம்பெற்றுள்ள அந்த புதிய ஜெர்சியை, ரோகித் சர்மா, ஜடேஜா, குல்தீப் ஆகியோர் வியந்து பார்க்கும் காட்சியும் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் , இந்திய அணியின் ஜெர்சியையும் காவி நிறத்தில் மாற்றிவிட்டார்கள் என ரசிகர்கள் சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.