இந்தியாவின் பஞ்சாப்பில் காதலிக்காக இளைஞர் ஒருவர் பெண் வேடமிட்டு பரீட்சை எழுதிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பஞ்சாப் – பரீத்கோட் மாவட்டத்தில் கோத்காபுரா நகரில் உள்ள பல்கலைக் கழகமொன்றில் அண்மையில் நடைபெற்ற சுகாதார பணியாளர்களுக்கான பரீட்சையின் போதே இவ்வாறு காதலிக்காக இளைஞர் பெண் வேடமிட்டு பரீட்சை எழுதியுள்ளார்.
சம்பவ தினத்தன்று பரீட்சை மண்டபத்தில் பெண்ணொருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் பரீட்சை எழுதுவதை அவதானித்த பரீட்சை கண்காணிப்பாளர்கள் அவரை பயோமெட்ரிக் உபகரணங்களிள் உதவியுடன் சோதனைக்கு உட்படுத்தினர்.
இதன்போது அவர் பெண் அல்ல ஆண் என்பது தெரியவந்து கண்காணிப்பாளர்கள் திகப்பில் ஆழ்ந்துள்ளனர்.
இதனையடுத்து இளைஞரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அவருடைய பெயர் ஆங்ரேஸ் சிங் என்பதும் , பசில்கா பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது.
அத்துடன் தனது காதலிக்காகவே போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி குறித்த பரீட்சையை அவர் எழுந்த வந்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுதிய இளைஞர் மீது வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணகளை முன்னெடுத்து வருகின்றனர்.