திருகோணமலை தனியார் காணி ஒன்றில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனியாருக்குச் சொந்தமான காணியை துப்புரவு செய்து கொண்டிருக்கும் போது இந்த கைக்குண்டை கண்டதாகவும் அதனை அடுத்து பொலிஸ் நிலையத்திற்கு தெரியப் படுத்தியதாகவும் தெரிய வருகின்றது.
இதனையடுத்து (21) குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸாரால் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கைக்குண்டை வெடிக்க வைக்க கந்தளாய் நீதிமன்றத்தின் அனுமதியை பெற உள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.