பொதுவாக தற்போது இருக்கும் பெண்களுக்கு தலைமுடி உதிர்வு பிரச்சினை அதிகமாக இருக்கிறது.
இது போன்ற பிரச்சினைகள் கால்சியம் குறைபாடு மற்றும் ஊட்டசத்து குறைபாடு ஆகிய முக்கியமான இரண்டு காரணங்களால் ஏற்படுகிறது.
மேலும் தலைமுடி உதிர்வு அதிகமாக இருக்கும் பெண்கள் அதனை கண்டுக் கொள்ளாமல் விட்டால் காலப்போக்கில் அது தலையை சொட்டாக்கி விடுகிறது.
அந்தவகையில் தலைமுடி அதிகமாக வளர செய்ய என்ன செய்யலாம் என சந்தேகத்தில் இருப்பவர்கள் கீழ் வரும் ரெமடியை பின்பற்றலாம். இது அடர்த்தியாகவும் கருகருப்பாகவும் முடியை வளரச் செய்கிறது.
தேவையான பொருட்கள்
- தயிர் – 1 கோப்பை
- தேன் – 2 தேக்கரண்டி
- கற்றாழை ஜெல் – 5 – 6 தேக்கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பவுலை எடுத்து அதில் மேற்குறிப்பிட்ட மூன்று பொருட்களையும் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
குளிப்பதற்கு முன்னர் தலைக்கு எண்ணெய் வைக்கும் பழக்கம் கொண்டவர்கள் இந்த ரெமடியை பயன்படுத்த வேண்டாம்.
தலையை நனைத்து விட்டு இந்த கலவை நன்கு தலைக்கு படும் படி அப்ளை செய்து கொள்ளவும். பின்னர் வெது வெதுப்பான நீரால் ஷாம்போ போட்டு அலசிக்கொள்ளவும்.
தலையில் அந்த வலுவலுப்பு தன்மை இருக்கும். காரணம் கலவையில் நாம் தயிர் சேர்ப்பதே.

