காக்கை கூட்டில் ஐக்கிய மக்கள் சக்தியும் முட்டையிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா காக்கைக் கூட்டில் முட்டையிடப்பட்டதாகக் கதையொன்றைக் கூறியதாகத் தெரிவித்த டயானா கமகே, அந்தக் கதையைக் கேட்டு தமக்கு சிரிப்பு வந்ததாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி செய்தது “எனது கூடு”க்கு வந்து முட்டையிட்டது தான், எனவே காக்கை கூட்டில் முட்டையிடக்கூடாது என்று கூறி உங்கள் தலைவரை தாக்காதீர்கள் என டயானா கமகே தெரிவித்தார்.
சமகி ஜன பலவேகவின் கொழும்பு மாவட்ட தவிசாளர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே ரணிலின் பொருளாதாரக் கொள்கையானது கூட்டில் இருக்கும் குஞ்சு போன்றது என தெரிவித்துள்ளார்.