முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் அனுராதபுரத்தில் பேரணி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலையில் அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.
முன்னதாக நாமல் ராஜபக்ஷ தலைமையில் பேரணி ஏற்பாடு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் இந்த பேரணி முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும், அதனை சீர்குலைக்கும் நோக்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டதாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த கைது நடவடிக்கையால் தளராமல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள பேரணி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

