கல்கிசை பொலிஸ் தலைமையக பரிசோதகர் எச்.டி.எம். துஷார உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, அவர் அந்தப் பதவியிலிருந்து மருத்துவ சேவைகள் பிரிவில் பொதுப் பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக, பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. மினுர சேனாரத்ன தெரிவித்தார்.
கல்கிசை நீதிமன்ற வளாகத்திற்குள் சட்டத்தரணி ஒருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில், கல்கிசை பொலிஸ் தலைமையக பரிசோதகர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.