கனேடிய மாகாணமான ஆல்பர்ட்டாவில் கொரோனா காட்டுத்தீயைபோல் வேகமாக பரவிவருகிறது.
ஆல்பர்ட்டாவில் மூன்றாவது அலையின் உச்சத்தில் இருந்ததைவிட வேகமாக கொரோனா பரவுவதாகவும்,
கொரோனா தொற்றின் எண்ணிக்கை அச்சுறுத்தும் அளவில் உள்ளதாகவும் தொற்று நோயியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஒருவரிடமிருந்து கொரோனா எத்தனை பேருக்கு பரவுகிறது என்பதைக் காட்டும் R எண், கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 1.48ஆக உள்ளது.
அதாவது, கொரோனா தொற்றுக்கு ஆளான 100 பேர், மேலும் 148 பேருக்கு கொரோனாவைப் பரப்ப இயலும் என்பது அதன் பொருள். இந்த எண்ணிக்கை மூன்றாவது அலையின்போது 1.15ஆக இருந்தது.
ஆக, கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கையை விட, இந்த அதிகரிக்கும் R எண் அதிக கவலையை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அது வெறுமனே அதிகரிக்கவில்லை, வேக வேகமாக அதிகரிக்கிறது என்று கூறும் ஃப்ரேஸர் பல்கலைக்கழக அறிவியலாளரான Carolyn Colijn, அதனால் கொரோனா நிலைமை வீழ்ச்சியடைகிறது என்ற நிலையிலிருந்து, அதிகரிக்கிறது என்ற நிலைமைக்கு வந்துள்ளது என்கிறார்.