கல்லடிப்பாலத்தில் குதித்தால் உயிர் தப்ப முடியாது, அங்கு குதிப்பது வெகு சுலபம் என்ற காரணத்தால்தான் எங்கெங்கோ இருந்தெல்லாம் இந்த பாலத்தை நோக்கி படையெடுக்கின்றனர் செத்துத் தொலைவதற்கு. தற்கொலையை தடுப்பதற்கு தற்கொலை பண்ண வரும் இடத்தை மட்டும் பாதுகாத்து என்ன பயன்? நீங்கள் கல்லடிப்பாலத்தை பாதுகாத்தால் அவன்/அவள் வேரொரு வழியை தேடுவார்கள் தேர்ந்தெடுப்பார்கள். எத்தனையோ விடயங்களை அலசி ஆராய்ந்து தகவல்களை வெளியிடும் எமது முகநூல் அணியினரால் ஒருமனிதன் தற்கொலைக்கு எவ்வாறு தள்ளப்படுகிறான் என்பதை ஆராய்ந்து பார்க்க முடியாமல் போனது வேதனைக்குரியது.
பொதுவாக இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிரை விடுபவர்களில் பெரும்பாலானோர் காதல் தோல்வியிலும், திருமணபந்தத்தில் ஏற்பட்ட தோல்வியில் விரக்தியடைந்தவர்கள்தான்.
காதல் தோல்வி என்பது இப்போது எல்லா இடங்களிலும் சாரமாரியாக இடம்பெற்று வருகிறது. இதில் குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து இலங்கையில் அதுவும் கிழக்கில் மட்டக்களப்பில் பெண் வேண்டும் என்று நினைத்து பெண் தேடுபவர்களால்தான் இந்த தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெண் ஒன்றை பார்த்துவிட்டால் போதும் உடனே அவளை கலியாணம் கட்டவேண்டும் என்று அவளுடைய வீட்டில் இருப்பவர்களை தொடர்பு கொண்டு கொஞ்சம் டாலர்களைக் காட்டி விடுவது. காய்ந்தமாடு கம்புல விழுந்தமாதிரி கிடந்த அவளின் பெற்றோர் “எப்படியாவது” மகளை வெளிநாடு அனுப்பிவிடவேண்டும் என்று நினைத்து அவசர அவசரமாக மகளை தயார் செய்யும்போதுதான் மகளுடைய உள்ளூர் காதல் உடைகிறது, அதனால்தான் தற்கொலைகள் இடம்பெறுகின்றன. இதை இன்னும் விரிவாக சொல்ல வேண்டும் என்றால் வெளிநாடுகளில் இருந்து இலங்கையில் கிழக்கில் பெண் தேடுபவர்கள் அந்த பெண்ணின் இறந்த காலத்தையும் அதில் உண்டான காதலையும் ஆராய்ந்து பார்க்க தவறிவிடுகின்றனர்.
திருமணத்திற்கு இடைத்தரகர்களாக செயற்படும் கலியாண புரோக்கர்கள் கூட்டிக் கொடுக்கும் கூட்டி கொடுப்பினால்தான் இன்று எத்தனையோ காதல்கள் மண்ணோடு மண்ணாகிப்போய் இவ்வாறான தற்கொலைகள் இடம்பெறுகின்றன என்ற உண்மையை ஒவ்வொரு ஐரோப்பிய மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கைத்தமிழர்கள் உணரவேண்டும். பணம் பாதாளம்வரை பாயும், அந்த பணத்திற்கு முன்னால் இந்த காதல் அன்பு பாசம் எல்லாம் நின்று தாக்குப்பிடிக்காது. பத்து வருடங்கள் என்ன பதினைந்து வருடங்கள் ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்திய குடும்பங்களையும் பிரித்து வெளிநாடுகளில் இருக்கும் மாப்பிள்ளைகளுக்கு ஏற்றுமதி செய்துகொண்டு இருப்பவர்கள்தான் இந்த கலியாண புரோக்கர்கள்.
சிவாஜி எம்ஜியார் காலத்தில் சொல்லப்பட்டதும் காதல் தான், ரஜினிகமல் காலத்தில் சொல்லப்பட்டதும் காதல்தான், அஜித்விஜய் காலத்தில் சொல்லப்பட்டதும் காதல்தான் சிவகார்த்திகேயன் தற்போது சொல்வதும் காதல்தான். 20 வருடம் இலங்கையில் ஒருவனை உருகியுருகி காதலித்த ஒருத்திய வெறும் ஆறு மாதத்தில் உருகியுருகி காதலிப்பார் புதிய வெளிநாட்டு மாப்பிள்ளை. அந்த டயர்நக்கி மாப்பிள்ளைக்கு 25 வருடமாக அவள் இலங்கையில் என்ன செய்துகொண்டு இருந்தாள் என்று அறிந்து கொள்ள துப்பில்ல காரணம் கேட்டால் “அவள் அழகாக குடும்ப பெண்” ஆக இருக்கிறாள் என்று சொல்லுவார். எப்படியாவது திருமணத்தில்தான் முடியவேண்டும் என்று காலகாலமாக காதலித்துவந்த காதலெல்லாம் அழிந்தொழிந்து போய் கடைசியில் தற்கொலைக்கு செல்வதற்கு மூலகாரணமாக அமைவது இந்த திடீரென்று உதிக்கும் வெளிநாட்டு “வரன்கள்” தான்.
அடுத்தன்ட சாவுல, அடுத்தவன்ட வயிற்றெரிச்சலில நீங்கள் இலங்கைக்கு வந்து பெண் எடுத்து கலியாணம் கட்டும் திருமண வாழ்க்கை சீரும்சிறப்புமாக அமையும் என்று ஒவ்வொரு வெளிநாட்டு மாப்பிள்ளைமாரும் நினைக்கிறீர்களா? வெறும் பாவத்தையும் பழியையுமே நீங்கள் திருமணம் என்ற பெயரில் கட்டிக் கொள்கிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம். இப்போது நீங்கள் அங்கிருந்து வாட்ஸ்அப்பிலோ வைப்பரிலோ அல்லது இமோவிலோ விடிய விடிய கடல போடுவது சொர்க்கத்தின் வாசற்படியாக தெரியும் ஆனால் உங்களுக்கு வரப்போகும் இலங்கை மனைவியின் சுயசரிதைகளை ஆராய்ந்து பார்த்து ஆசைகளை வளர்ப்பது இலங்கையில் அதுவும் கிழக்கில் இடம்பெற்றுவரும் தற்கொலைகளைத் தடுக்கும்.
இது வெளிநாட்டிலிருக்கும் மாப்பிள்ளை மார்களுக்கு மட்டுமல்ல கொத்துக்குள் இருக்கும் மாங்கனிகள் போல அலங்கரித்திருக்கும் மணப்பெண்களுக்கும்தான், இங்கு இலங்கையில் ஒரே தடவையில் பல பெண்களை காதல் என்ற போர்வையில் வைச்சி செய்து கொண்டு இருப்பானுகள் கேட்டால் “எனக்கு வெளிநாட்டில் பெண் இருக்கிறது” என்று சொல்லுவானுகள், கடைசியில் நேரம் வந்ததும் அத்தனை பெண்களுக்கும் டாட்டா காட்டிவிட்டு போய்விடுவானுகள் அதற்குப் பிறகு கல்லடிப்பாலத்தை நோக்கி படையெடுக்கும் நமது பெண்ணினம்.
அடுத்தவன்ட மனைவியையும் அடுத்தவன்ட காதலையும் பணத்தையும் வெளிநாட்டு வாழ்க்கையையும் காட்டி பிரித்தெடுப்பதை எப்போது இந்த வெளிநாட்டு வாழ் இலங்கைத்தமிழர் நிறுத்துகிறார்களோ அன்றைய நாள் முதல் இலங்கையில் கிழக்கில் மட்டக்களப்பில் தற்கொலைகள் இல்லாமல் போகும்.
சட்டம் ஒரு இருட்டறை அந்த சட்டத்தின் ஓட்டைகள் வழியே எத்தனையோ சமாச்சாரங்கள் இடம்பெறுகின்றன. உதாரணமாக வெளிநாட்டு மாப்பிள்ளையின் தொடர்பு கிடைத்தவுடன் இங்கு விவாகரத்து போடப்படுகிறது. விவாகரத்து போட்டவுடன் தமக்கு விவாகரத்து கிடைத்துவிட்டதாக சில பெண்கள் நினைக்கின்றனர். விவாகரத்து வழக்கில் கொடுக்கப்படும் தவணைகளை விவாகரத்து போட்ட பெண் தனக்கு சாதகமாக பயன் படுத்துகிறாள். ஒருபுறம் விவாகரத்து வழக்கு சென்று கொண்டிருக்கும் மறுபுறம் விவாகரத்து போட்ட பெண் தனது வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் உறவைப் பலப்படுத்திய வண்ணம் இருப்பாள். இது தெரியாமல் ஒவ்வொரு வழக்குத்தவணைக்கும் அவளுடைய கணவன் வந்து போவான். பெண்ணால் போடப்பட்ட விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கையில் அங்கு எதிராளியாக குறிப்பிடப்பட்ட ஆண் எந்த காரங்கொண்டும் நீதிமன்ற அனுமதியில்லாமல் அந்த பெண்ணை சந்திப்பதற்கு செல்ல முடியாது இதை சட்டம் சொல்கிறது ஆனால் இந்த நடைமுறை அநேகமான ஆண்களுக்கு தெரிவதில்லை, எப்படியாவது தனது கடைசித்துளி அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் ஆண் அவளை நோக்கி செல்கிறான் காரணம் அந்த ஆண் அந்த பெண்ணை இழக்க தயாராக இல்லை, அதேசமயம் விவாகரத்து நடந்து கொண்டிருக்கும் போது எனது முன்னாள் கணவன் என்னைத்தேடி வருகிறான், என்னை தொந்தரவு செய்கிறான், என்னை கொலை அச்சுறுத்தல் செய்கிறான் என்றெல்லாம் பக்கத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து அந்த முறைப்பாட்டுப் பிரதியை தனது வழக்குத்தவணையில் நீதிமன்றில் சமர்ப்பித்து விடுகிறாள்.
இதனால் மேலும் மேலும் அந்த பெண்ணுக்குத்தான் வழக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது.
ஆகவே இந்த சட்டமும் ஒரு வகையில் மனிதர்களுக்கு ஏற்படும் மன உழைச்சல்களுக்கு காரணமாகிவிடுகிறது. எனவே விரக்தியின் விளிம்பிற்குச் சென்று தற்கொலை முயற்சிக்கு தள்ளப்படும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இவ்வாறான பிரச்சினைகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. நான் கடைசிவரை என் மனைவியுடன் வாழவேண்டும் என்றுதான் விரும்புகிறேன் எனக்கு வேறு வாழ்க்கை இல்லை என்று அந்த ஆண் எத்தனை முறை மன்றாடிக் கெஞ்சினாலும் அந்த பெண்ணுடைய மனசில் வெளிநாட்டு வாழ்க்கை சொர்ப்பனமாக விதைக்கப்பட்டு விட்டதால் அவளுடைய மனசில் தனது முன்னாள் கணவனுக்காக இம்மியளவும் ஈரம் இருப்பதில்லை. அதனால் இந்த வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு பகிரங்கமாக ஒன்றை சொல்லியாக வேண்டும். ஏற்கெனவே உங்களுக்கு சொன்னதுபோல இப்போதும் சொல்கிறோம், இந்த காதல் பிரிவால் இருக்கும் பெண்கள், விவாகரத்து போட்டிருக்கும் பெண்கள் போன்றோரை கலியாணம் கட்டி நீங்கள் சாதிக்க போவது என்ன? 20 வருடமாக நகமும்சதையும்போல காதலித்த, திருமணம் முடித்தவனுகளையே வெளிநாட்டு வாழ்க்கைக்காக தூக்கி எறிந்துவிட்டு வாறாளுகள், இதேபோல் உங்களையும் ஒரு நாளைக்கு தூக்கி எறிந்துவிட்டு போகமாட்டாளுகள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இது ஒருபுறம் இருக்க “நீங்கள் இப்போது கஸ்டப்பட்டு இரவிரவா” விழுந்து விழுந்து காதலிக்கிறிங்க அதுவும் இன்னொருவன்ட மனைவிய, அவள் உங்க இடத்திற்கு வந்து PR கிடைத்தவுடனோ அல்லது அதற்கு முதலோ உங்களுக்கு ஆப்பு றிவேட்டாக அடித்தால் உடனே தற்கொலை செய்து கொள்வீர்களா? இப்படி எத்தனை மாப்பிள்ளை மார் இலங்கையிலிருந்து விபரம் தெரியாமல் தொலைபேசியில் மட்டும் காதலித்து பின்னர் இந்தியாவில் வைத்து தாலிகட்டி உங்க நாட்டுக்கு கூட்டிப்போய் இப்போது வெளிநாட்டில் நடுத்தெருவில் நிற்கிறீர்கள் நிம்மதி இல்லாமல்.
பச்சையாக சொல்ல வேண்டும் என்றா “இன்னொருத்தன்ட மனைவி எதற்கு?” இன்னும் கொஞ்சம் பச்சைபச்சையா சொல்லவேண்டும் என்றா “பத்து பதினைந்து வருடம் இன்னும் ஒருத்தன் ஆண்டு அனுபவித்த புரோபட்டில என்ன இருக்கும்?” முக அழகையும் பேச்சு சினுங்கலையும் வைத்து ஒரு பெண்ணை எடை போட்டு கலியாண தரகர்களின் பேச்சை நம்பி ஏமாந்திடாதிங்கோ.
வேலியால போனத ஜட்டிக்குள் பிடித்து விட்ட போலாகிவிடும்.