கனடா மற்றும் இத்தாலி இலங்கையின் தூதுவராக நிராகத்த விமானப்படையின் முன்னாள் தளபதி எயர்மார்சல் சுமங்கல டயசினை மலேசியாவிற்கான தூதுவராக நியமிப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலேசியாவிற்கான இலங்கை தூதுவராக பணிபுரிகின்ற ஏஎம் கபிலஜயம்பதியின் பதவிக்காலம் டிசம்பர் மாதம் முடிவடையவுள்ளது. இந்த நிலையிலேயே புதிய தூதுவரை நியமிப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.
இதேவேளை முன்னாள் விமானப்படை தளபதியை தூதுவராக ஏற்றுக்கொள்வதற்கு இத்தாலி மறுத்துள்ளதை தொடர்ந்து புதியவர் ஒருவரை நியமிக்கவேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர்க்குற்றச்சாட்டுக்கள் காரணமாக விமானப்படையின் முன்னாள் தளபதி எயர்மார்சல் சுமங்கல டயசினை தூதுவராக ஏற்றுக்கொள்ள குறித்த நாட்டுகள் மருத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.