தமிழகத்தில் கணவர் உயிரிழந்த நிலையில் குழந்தை பெற்றெடுத்த பெண்ணை மைத்துனர் வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடியை சேர்ந்தவர் சின்னதுரை. இவர் மனைவி ராமலட்சுமி.
சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னத்துரை இறந்து விட்ட நிலையில் ராமலட்சுமி தனியாக வசித்து வந்தார்.சில மாதங்களாக ராமலட்சுமியின் நடவடிக்கையில் அவரின் மைத்துனர் கொம்பன் என்ற சேகருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், ராமலட்சுமி கர்ப்பமடைந்துள்ளார். மூன்று வாரங்களுக்கு முன்பு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.இதனால், ராமலட்சுமியிடன் குழந்தைக்கு யார் தந்தை என்று கேட்டு கொம்பன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், ராமலட்சுமி தனக்கு பிறந்த குழந்தையை யாருக்கும் காட்டாமல், தனக்கு தெரிந்தவர்களுக்கு தத்து கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது .இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் தனியாக இருந்த ராமலட்சுமியிடம் கொம்பன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கொம்பன் ராமலட்சுமியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.
தப்பியோடிய கொம்பனை பொலிசார் தேடி வருகின்றனர். மேலும் சென்று உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.