ஒரு ஆரோக்கியமான உறவென்பது காதலை தாண்டி, அதில் இருக்கும் நேர்மையை சார்ந்திருக்கிறது. எத்தனையோ ஆண்கள், பெண்கள் தங்கள் துணையை உண்மையாக நேசித்தாலுமே கூட… வேறொரு நபருடன் நெருங்கி பழக வாய்ப்பு, சூழல் அமையும் போது அதை பயன்படுத்திக் கொள்ள முனைவதன் காரணம்… இந்த நேர்மை தவறுதல் தான். பெரும்பாலும் நாம் செய்திகளில், திரைப்படங்களில், சீரியல்களில், ஏன் நமக்கு தெரிந்தவர் மத்தியிலுமே கூட ஆண் தனது மனைவியை ஏமாற்றிவிட்டார் என்ற கதைகளை தான் கேட்டிருப்போம். சரி! ஆண்கள் தான் அதிகமாக உறவில் நம்பிக்கை துரோகம் செய்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம்… எந்தெந்த சூழல், காரணங்கள் அவர்களை தங்கள் மனைவிக்கு துரோகம் செய்ய தூண்டுகிறது…
ஒரு ஆண் மனைவியை ஏன் ஏமாற்ற தூண்டப்படுகிறான் அதற்கான காரணம் என்ன என்பது மிக எளிமையானது. திருமணமாகி குழந்தை பெற்றிருந்தாலுமே கூட… பெண் மீதான ஈர்ப்பு குறையாத… காரணமே இன்றி பெண்களை ரசிக்கும், கவர்ந்திழுக்க நினைக்கும் ஆண்கள் இருக்க தான் செய்கிறார்கள். ஜிம், பார்க், சூப்பர் மார்கெட், சினிமா, என எந்த இடத்தில் வாய்ப்பு கிடைக்கும் போதும், அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள குறைந்தபட்சம் ஒரு பார்வை போதும் என்ற நோக்கத்திலாவது கவர்ந்திழுக்க ஆண்கள் நினைப்பது உண்டு. சில சமயத்தில் இந்த ஈர்ப்பு அடுத்த கட்டத்திற்கு நகரும் போது, அந்த சூழல் அமையும் போது வேறுவிதமான தாக்கங்கள் உறவில் உண்டாக காரணமாகிறது. விளையாட்டு வினையாகும் என்பார்களே அதைப்போல.
ஒரு ஆண் தன் துணையை ஏமாற்றுகிறான் என்றால்.. அவன் உண்மையில் அந்த பெண்ணை காதலிக்கவில்லை என்று பொருள். உறவில் முக்கியமானது ஆழமான நம்பிக்கை, இணைப்பு. அத புரிதல் இல்லாமல் போதும் போது. வீட்டில் அவன் எதையோ இழக்கும் போது… அவன் தனது எண்ணங்களை வேறு ஒரு நபர் மீது திருப்புகிறான். சிரித்து பேசவோ, நெருங்கி பழகவோ, செக்ஸ் வைத்துக் கொள்ளவோ… அது எதுவாக, எதற்காக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், எந்த வகையில் இந்த திசை மாற்றம் நிகழ்ந்தாலும் அது கடைசியாக சென்றடையும் இடம் செக்ஸ். ஒருவேளை, அவன் அதற்கு மாறாக தன் துணையையே அளவுக்கடந்து நேசிக்க முயற்ச்சித்தான் எனில், அவன் ஈர்ப்பு, கவன மாற்றம் எங்கேயும் செல்லாது. காதல் என்பது எதிர்பார்ப்பது மட்டுமல்ல, கொடுப்பதும் கூட.
சில ஆண்கள் துரோகம் செய்ய வேண்டும் என்று எண்ணுவதில்லை. ஆனால், அந்த சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். உணர்வு ரீதியாகள், செக்ஸுவல் ரீதியாக எதையாவது இழக்கும் போது, தடைகள் காணும் போது. வேறு ஒரு நபரை நாடும் எண்ணம் பிறக்கலாம். சிலர் தங்கள் துணையை, குழந்தைகளை பொருளாதார ரீதியாக தவிக்க விட்டுவிட கூடாது என்று கருதுவதால். இரட்டை குதிரை வண்டியில் பயணிக்க நினைப்பதும் உண்டு. அதாவது தனக்கு பிடிக்காமல் நடந்த திருமண பந்தத்திலும் இணைந்திருபார்கள்., தங்களுக்கு பிடித்த வேறு பெண்ணுடன் சேர்ந்து வாழவேண்டும் என்றும் விரும்புவார்கள். இது நிச்சயம் ஒருநாள் பூகம்பமாக தான் முடியும்.
பெரும்பாலான உறவுகளில் துரோகம் நடைப்பெற காரணமாக இருப்பது இந்த செக்ஸ் தான். தாங்கள் விரும்பும் அளவுற்கு, திருப்தி அடையும் விதத்தில் செக்ஸ் வாழ்க்கை அமையவில்லை என்றால்… அவர்களுக்கு கிடைக்கும் ஒரே மாற்று தீர்வு ஏமாற்றுதல். ஆண், பெண் இருவருக்குமே இது அவசியம் வேண்டியது தான். ஆனால், சில விஷயங்கள் பெண்களுக்கு வலி மிகுந்ததாகவும், அசௌகரியமாகவும் இருக்க வாய்ப்புகள் உண்டு. அத்தகைய அனுபவங்களை கட்டாயம் பெற வேண்டும் என்று கருதும் ஆண்கள் உறவில் ஏமாற்ற முனைகிறார்கள். அதுமட்டுமின்றி, அழகு, உடல் வடிவம் என பல காரணங்கள் இதில் அடங்கி இருக்கின்றன. ஆனால், என்ன காரணங்கள் இருப்பினும், அந்த உறவில் நேர்மை இருந்தால்.. இந்த காரணங்கள் எல்லாம் தூசாகிவிடும்.
சில ஆண்கள் ஏமாற்றுவார்கள்… அதற்கு குறிப்பிட்ட ஒரு காரணம் இருக்காது… அவர்கள் ஏமாற்றுவதற்கு என்றே காரணத்தை உருவாக்கி கொள்வார்கள். வாய்ப்புகள் கிடைக்கும் வரை, யாரிடமும் மாட்டாத வரை ஏமாற்றும் அவர்கள். மாட்டிக்கொள்ளும் பட்சத்தில் அந்த சூழலுக்கு ஏற்ப காரணத்தை உருவாக்கி கொள்வார்கள். உதாரணமாக குடி போதையில் இருந்தேன் எனக்கு தெரியவில்லை. வேலை போன சமயத்தில் மன அழுத்தம், சோகம் போன்ற காரணங்களால் மனம் தடுமாறி தவறு செய்துவிட்டேன் என்று உணர்வு ரீதியாக சிம்பத்தி உருவாக்கி கொள்வது போன்ற காரணங்களை இவர்கள் ஈன்றெடுப்பார்கள். உண்மையாகவே ஒரு ஆண் அல்லது பெண் தனது துணையை ஏமாற்றக் கூடாது என்று தீர்க்கமாக இருந்தால், காதல், திருமண உறவில் நேர்மையாக இருந்தால்… எந்த சூழல் அமைந்தாலும், எத்த்னாவ் போதை,, மன அழுத்தம், ஏன் ஒரு நபர் தன்முன் நிர்வாணமாக வந்து நின்றாலுமே கூட தட்டிவிட்டு சென்று விடுவார்கள். சில சமயம் சூழல், மன தடுமாற்றம் நிஜமாகவே ஏற்படுகிறது. சிலர் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.