ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா விரைவில் நீக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கட்சித் தலைவரையும், கட்சியால் எடுக்கப்படும் முடிவுகளையும் பொன்சேகா வெளிப்படையாக விமர்சித்து வருவதால் பலரும் கட்சித் தலைவரிடம் முன்வைத்த தொடர்ச்சியான கோரிக்கைகளால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சஜித்துக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்த நிலையில்,
முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்கவை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்துகொண்டதையடுத்து பிரச்சினை உக்கிரமடைந்து விடயம் பொது வெளிக்கு வந்தது. எனினும், கட்சியை விட்டு வெளியேறும் திட்டம் இல்லை என்று பொன்சேகா தெரிவித்துள்ளார்.