தாய்லாந்தில் கடற்கரையில் நடந்து சென்ற பெண்ணுக்கு நினைத்து பார்க்க மு டியாத வகையில் அதிர்ஷ்டம் அடித்துள்ளதால், அவர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்தாய்லாந்தின் Nakhon Si Thammarat மகாணத்தில் இருக்கும் கடற்கரைக்கு, கடந்த 23-ஆம் திகதி ஒரு கடுமையான மழைக்கு பிறகு Siriporn Niamrin(49) என்ற பெண் நடந்து சென்றுள்ளார்
அப்போது அங்கு ஒரு பெரிய வெள்ளை நிறத்தில், பொருள் கடலின் ஓரத்தில் மிதந்து கொண்டிருந்துள்ளது இதைக் கண்ட அவர் அருகில் சென்று பார்த்த போது, அது ஒரு வாசனையாக இருந்துள்ளது
இதனால் அதை கடற்கரைக்கு இழுத்து வந்த அவர், தனது அண்டை வீட்டாரிடம் அது பற்றி உதவி கேட்டுள்ளார் அப்போது அவர்கள் இது திமிங்கலத்தின் வாந்தி அதாவது, ஆங்கிலத்தில் Ambergris என்று கூறியுள்ளனர்சுமார் 12 அங்குல அகலம், 24 அங்குல நீளம் கொண்ட அந்த Ambergris 68 கிலோ இருந்துள்ளது, இது அப்படி உண்மையான திமிங்கலத்தின் வாந்தியாக இருந்தால், இதன் மதிப்பு, 186,500 பவுண்ட்(இலங்கை மதிப்பில் 3,59,83,998 கோடி ரூபாய்) ஆகும்
இது Ambergris தானா என்பதை சரிபார்க்க, Siriporn Niamrin மற்றும் பக்கத்துவீட்டினர் அதை உருக வைப்பதற்காக வெப்ப படுத்தியுள்ளனர் அது அப்படியே உருகி, அதன் பின் மீண்டும் கடினமாகியுள்ளது வாசனையும் வந்துள்ளதாக கூறப்படுகிறதுAmbergris வாசனை திரவிய தொழிலில் பயன்படுத்தப்படும் ஒரு அரிய வகை பொருள், இது அது தானா என்பதை உறுதிபடுத்துவதற்காக, நிபுணர்கள் Siriporn Niamrin வீட்டிற்கு செல்லவுள்ளனர்