ஓய்வு பெறுவோரின் வயதெல்லை 65 வரையில் அதிகரிக்கும் வரவு செலவுத்திட்ட முன்மொழிவு, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நாள் தொடக்கம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஓய்வுபெற்ற அல்லது ஓய்வு பெறுவதற்கு உள்ள அதிகாரிகளை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டு,மாயின் அதற்காக நிறுவக பிரதானியின் அனுமதி கட்டாயமாகுமென அரச சேவை அமைச்சின் செயலாளர் ஜெ.ஜெ.இரத்தினசிறி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முன்மொழிவு ஜனவரி முதலாம் திகதியாக இருந்த போதிலும் ,முன்மொழிவு முன்வைக்கப்பட்ட நவம்பர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் ஓய்வு பெற்ற அல்லது ஓய்வு பெறவுள்ள அதிகாரிகள் தொடர்பில் நிவாரணம் வழங்கப்படுமாயின் உரிய நடைமுறை தயாரிக்கப்பட வேண்டும் என்று ஓய்வூதிய திணைக்களம் அந்த அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த செயலாளர் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் இந்த அதிகாரிகளை சேவையில் நியமிப்பதா இல்லையா என்பது தொடர்பாக எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்தார்.