இந்தியா ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் பயணித்த 4 பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) காவலர் ஒருவர் ஓடும் ரயிலில் சுட்டுக்கொல்லசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இன்று அதிகாலை ஐந்து மணிக்கு நிகழ்ந்துள்ளது. ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது காவலர் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியுள்ளார்.
மும்பையில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ரயில் நிலையம். உயிரிழந்த நால்வரில் ஆர்பிஎஃப் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் என்றும் மற்ற மூவரும் ரயிலில் பயணித்த பயணிகள் எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய கான்ஸ்டபிள் சேத்தன் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதல்கட்ட தகவலின்படி, ஆர்பிஎஃப் கான்ஸ்டபிள் சேத்தன் சிங்க்கும், அவருடன் பயணித்த சப்-இன்ஸ்பெக்டரும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அவர்களை சமாதானம் செய்ய சக பயணிகள் முயன்ற சமயத்தில் கான்ஸ்டபிள் சேத்தன் சிங் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த துப்பாக்கியால் சுட்டத்தில் சம்பவத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
நான்கு பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தாஹிசார் ஸ்டேஷன் அருகே ரயிலில் இருந்து குதித்து தப்பிச் சென்ற நிலையில் ரயில்வே பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ததுடன் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.