ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் மக்கள் வரிசையில் நிற்காமல் எரிவாயுவை தட்டுப்பாடு இன்றி பெற்றுக்கொள்ள முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
லிட்ரோ நிறுவனம் இம்மாதத்திற்குள் எரிவாயு தட்டுப்பாட்டை முற்றாக முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் வரிசைகள் இன்றி எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.