போதைப்பொருட்களை கண்டுபிடிப்பதற்காக பாரீஸில் ரெய்டு ஒன்றை மேற்கொண்டனர் பொலிசார்.
ரெய்டில் ஒரு மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான போதைப்பொருள் கிடைத்தது. ஆனால், அது போதைப்பொருளே அல்ல என பின்னர் தெரியவந்தது.
இளஞ்சிவப்பு நிறத்தில் கைப்பற்றப்பட்ட அந்த பொருள் அரைக்கப்பட்ட இனிப்பு என தெரியவரவே, பொலிசார் தலையைச் சொறிந்துகொள்ள நேர்ந்தது.
பிரான்சில் புகழ்பெற்ற Haribo என்ற இனிப்பு தயாரிப்பு நிறுவனம், இனிப்புகள் செய்வதற்காக ஸ்ட்ராபெர்ரி பழங்களிலிருந்து தயார் செய்து இனிப்புகளை செய்வதற்காக வைத்திருந்த பொடியைத்தான், பொலிசார் போதைப்பொருள் என நினைத்து கைப்பற்றியுள்ளனர்!