ஒரு குறிப்பிட்ட வயதில் பல ஆண்களுக்கு வெறுத்துப்போய், ஏதாவது ஒரு பெண் கிடைத்தால் போதும், என்ற மனநிலை உண்டாகிவிடும். அந்த நேரத்தில் இயல்பாகவே வயதில் மூத்த பெண்கள் மீதும் காதல் வரும். அது ஏன் தெரியுமா? இளம்பெண்கள் எதற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். அம்மா அப்பா கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும். வயதில் மூத்த பெண்களுக்கு அவ்வாறு கட்டுப்பாடு குறைவு. ஊரும் சந்தேகப்படாது. விரும்பும் நேரங்களில் எல்லாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்ற எண்ணம் மேலோங்கி விடுகிறது.
எல்லா ஆண்களும் குறிப்பிட்ட பருவத்தில், வயதில் மூத்த பெண்கள் மீது ஆசைப்படுவது ஒன்றும் புதிதல்ல. அதே போல வயது குறைந்த பெண்கள், வயது மூத்த ஆண்களில் ஆசைப்படுவதும் சகஜமே. ஒரு காலத்தில் சமூக வெளிச்சத்துக்கு வராத சம்பவங்கள், இப்போ மெல்ல மெல்ல வெளியில் கசிய ஆரம்பித்திருக்கிறது அவ்வளவு தான். என்னுடன் பணியாற்றும் பெண், அவளை விட வயதில் இளைய ஒருவரை விரும்பி இருக்கிறாள். என்னிடம் வந்து, “அவர் என்னை விட 4 வயது சிறியவர். திருமணம் செய்வதாகக் கூறியதால் காதலித்தேன். சகலமும் முடிந்தது. இப்போது வயது, மதத்தைக் காரணம் காட்டி விலகி விட்டார்” என்றாள்.
எனக்கு என்னவோ, இதற்கு பெயர் காதல் இல்லை என்றே தோன்றுகிறது. வேறென்ன காமம் தான். காதலின் பெயரில் எடுக்கும் பிச்சை தான் கா மம். ஒரு ஆண் கா மத்திற்காக எந்த எல்லைக்கும் போவான் என்பதை, நிறைய உளவியல் சார்ந்த புத்தகங்களில் படித்துள்ளேன். இது போன்ற ஆட்களால் தான், உண்மையான அக்கறைக்கும், போலியான அக்கறைக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடுகிறது. நல்லாதே செய்ய சென்றாலும், தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர்.
வார்த்தை ஜாலங்களை மட்டுமே நம்பி ஏமாறும் பெண்கள் இருக்கும் வரையில், கொக்கின் வாயில் சிக்கிய மீன் போலத்தான். அவன் இழுத்த இழுப்பிற்கு செல்ல வேண்டும். எந்த உறவு முறையும் இல்லாமல், ஒரு வயது குறைந்த ஆண் எல்லை மீறி பழகுகிறான் என்றாலே, சிக்கல் இல்லாமல் அவன் உடல் தாகத்தை தணிக்கத் தான் என்பதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். நிறைய பேருக்கு இது புரிவதில்லை. பட்டு தெரிந்த பிறகு, புலம்பி என்ன பிரயோஜனம்?