மக்கள் நீதி மய்யம் பொருளாளர் வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய சோதனையில் ரூ.11.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.திருப்பூரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான அனிதா டெக்ஸ்காட் மற்றும் அனிதா ஹெல்த்கேர் நிறுவனங்களில் மார்ச் 17ம் திகதி முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டர்.
அனிதா குழுமம், நூல் வர்த்தகம் மற்றும் பிபிஇ கருவிகள், பைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு கருவிகளை பல்வேறு மாநில அரசுகளுக்கான விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.திருப்பூர், தரபுரம் மற்றும் சென்னை ஆகிய 8 இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.
வருமான வரித்துறையினர் சோதனையில் மநீம பொருளாளர் சந்திரசேகரிடமிருந்து ரூ.11.50 கோடி கணக்கில் வராத பயணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேலும், ரூ.80 கோடி வருவாயை சந்திரசேகர் கணக்கில் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.