17வது இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடருக்கான போட்டி அட்டவணை நேற்றையதினம் (22-02-2024) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தொடர் எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்தியாவில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தல் காரணமாக முதல் 17 நாட்களுக்கான போட்டி அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, மார்ச் 22ம் திகதி முதல் ஏப்ரல் 7ஆம் திகதி வரையில் 21 போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.