ஏழு கழுதை வயசாகியும் சில பேருக்கு திருமண யோகம் என்பது கைகூடி வராது. கைகூடி வரும் திருமண யோகமும், தள்ளி சென்று கொண்டே இருக்கும். ஒரு மனிதனுடைய ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருக்கும் பொழுது கட்டாயம் அவருக்கு திருமண தடை ஏற்படுகிறது. தொடர்ந்து திருமணம் கைகூடி வந்தாலும் அது இடையில் நிறுத்தப்படும்.
இதனால் ஜாதகர்கள் பெருமளவில் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவார்கள். இன்னும் சிலருக்கு காரியத்தடை, சுப காரிய தடை போன்றவையும் ஏற்படுவது உண்டு. சாதாரணமாக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தடைகள் ஏற்படும்.
புதிதாக ஒரு தொழில் ஆரம்பிக்க நினைத்தால் உங்களால் அதை முழுமையாக செய்து முடிக்க முடியாமல் போய்விடும். அல்லது வர வேண்டிய பணம் கைக்கு வராமல் தடைபடும். இதனால் நீங்கள் செய்ய இருக்கும் காரியம், தொழில் போன்றவையும் நிலுவையில் நின்றுவிடும்.
எதிர்காலத்தில் அந்த தொழிலை செய்ய வேண்டும் என்கிற எண்ணமே உங்களுக்கு மாறிப் போய்விடும். இது போன்று தொழில் தடை, காரிய தடை, சுபகாரியத் தடைகள் போன்றவைகள் உங்களுக்கு கொடுக்கும் தொல்லைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள மிக மிக எளிதான சூட்சம பரிகாரங்கள் உள்ளது. இதற்காக பெரிதாக நீங்கள் செலவு கூட செய்ய தேவையில்லை. அப்படியான பரிகாரம் என்ன என்று பாரக்கலாம்.
திருமணம் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே இருக்கும் பொழுது நாம் ஜோதிடரிடம் சென்று ஜாதகத்தை காண்பிக்கும் பொழுது அவர்கள் பெரும்பாலும் கூறுவது கால சர்ப்ப தோஷம் தான். இந்த கால சர்ப்ப தோஷம் நீங்க பல்வேறு பரிகாரங்களும் கூறப்படுகிறது.
இதற்காக அதிக செலவு செய்யவும் தேவைப்படுகிறது. ஆனால் கால சர்ப்ப தோஷம் நீங்க ஆன்மீக ரீதியான எளிய பரிகாரங்கள் உண்டு. இந்த எளிய பரிகாரங்களை செய்யும் பொழுது கால சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
திருமணத்தில் வாசிக்கப்படும் நாதஸ்வரத்தில் இருக்கும் ஏழு ஓட்டைகளும் ஏழு கிரகங்களை குறிக்கிறது. நாதஸ்வரத்தில் இருக்கும் வாயகன்ற முன் பகுதி ராகுவையும், நாம் வாய் வைத்து ஊதும் இடத்தில் கேதுவையும் குறிப்பதாக கூறப்படுகிறது.
ஆகவே இந்த நாதஸ்வரம் ஆனது நவகிரகங்களையும் தன்னுள்ளே அடக்கியுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. எனவே இந்த நாதஸ்வரத்தில் இருந்து வரும் ஒலியின் அலைகள் நமக்கு கால சர்ப்ப தோஷத்தில் இருந்து தீராத விடுதலையை கொடுக்கிறது என்பது நம்பிக்கை.
தடைகள் இருப்பவர்கள் காலை, மாலை என இருவேளையும் நாதஸ்வரத்தின் ஒலியை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அது இந்த தோஷத்தில் இருந்து வரும் பாதிப்புகள் குறைவதற்கு வழிவகை செய்யும். வேலை செய்யும் பொழுதும், வீட்டில் அமைதியாக அமர்ந்து இருக்கும் பொழுதும் இந்த நாதஸ்வர இசையை அடிக்கடி கேட்டு பாருங்கள். அதே போல உங்கள் இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வத்திற்கு தேவையான பூஜைப் பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
குறிப்பாக கோவிலுக்கு தேவைப்படும் மணி உங்களால் முடிந்த அளவிற்கு எடை கனமாகவும், அருமையாகவும் செய்யப்பட்டுள்ள கோவில் மணியை வாங்கிக் கொடுத்தால் தோஷத்திலிருந்து நீங்க பெறுவதாக ஐதீகம் உள்ளது. கோவிலுக்கு கொடுக்கப்படும் மணி தானம் உங்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் தடைகளை நீக்க செய்யும். மனதிற்குப் பிடித்த வரனை மணமுடியும் யோகமும் உண்டாகும் என்பதே நிதர்சனம்.