அவன் அவன் வீட்டில் என்ன நடக்கின்றது என்று தெரியாமல், பொத்தாம் பொதுவாக கணினி துறையில் வேலை செய்தால் பெண் சுலபமாக கிடைத்துவிடும் என்று பலபேர் நினைக்கிறார்கள். இது தவறான உதாரணம். எனக்கு தெரிந்தவரை பல காரணம் உள்ளது. எல்லா வசதி வாய்ப்புகளும் இருந்தும், திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருப்பதையும் காண முடிகிறது. ஆரம்பத்தில் திரிஷா மாதிரி பொண்ணு வேணும்னு கேட்ட பசங்க எல்லாம், போகப்போக திவ்யா மாதிரி என்ன, அதற்கு கீழ் இருந்தாலும் ஓகே என்கின்றனர்.
வயது ஏற ஏற எப்பேர்ப்பட்ட ஆணாக இருந்தாலும், எல்லா எ திர்பார்ப்புகளையும் மீறி க ட்டிக்க ஏதோ ஓர் பெண் கிடைத்தாலே போதும் என்ற மன நிலை வந்துவிடுகிறது. கா மம் என்ற உணர்வை தாண்டி, வாழ்க்கைக்கு துணை கட்டாயம் தேவை என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஒரு சிலர் 60 வயதில் கூட திருமணம் செய்துகொள்கின்றனர். அவர்கள் என்ன தா ம்பத்திய சு கம் பார்த்தா இணைகின்றனர்? எல்லாம் இந்த அன்பு படுத்தும்பாடு ஒன்று தான்.
35 வயதை கடந்துவிட்டால் ஒரு சில ஆண்கள், எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று முடிவு எடுக்கின்றனர். பாதிப்பேர் வாழ்க்கையை மற்றும் வேலையே க ல்யாணம் செய்து கொள்கின்றனர். சிலர் ஆன்மீகத்தில் இறங்கிவிடுகின்றர். எல்லா ஆண்களுக்கும், அவர்கள் ஆசைப் பட்ட மாதிரி பெண் மனைவியாக அமைந்து விடுவதில்லை. ஆ சைப்பட்ட மாதிரி பெண் கிடைக்காமல் பல வருடங்கள் கடந்து பிறகு தான், குடும்ப வா ழ்க்கைக்கான சில முக்கிய முடிவுகளை எடுக்கத் தொ டங்குகிறார்கள் சில ஆண்கள்.
எந்த பெண்ணாக இருந்தாலும், குடும்ப வாழ்க்கைக்கு நல்ல குணமும், நல்ல பண்பும், குடும்பத்தை நல்லபடியாக நடத்திச் செல்லும் குடும்ப தலைவியாக இருந்தாலே போதும். ஒரு சிலருக்கு இது சிறு வயதில் புரிந்துவிடும். சிலருக்கு காலம் கடந்த பிறகே புரிவதால், அந்த நேரத்தில் எந்த பெண்ணாக இருந்தாலும் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வருகின்றனர். ஆரம்பத்தில் காட்டும் வீம்பும், வீராப்புமே பலருக்கு திருமணம் தள்ளிப்போக காரணமாகிறது.