பொதுவாக காய்கறிகள், பழங்கள் உடலில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகின்றது.
அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கிழங்கு வகைகளில் ஒன்று தான் உருளைகிழங்கு.
இந்த கிழங்கு சோலானம் டியூபரோசம் (solanum tuberosum) என்னும் செடியின் வேரில் இருந்து பெறும் மாவுப்பொருள் நிறைந்த கிழங்காக பார்க்கப்படுகின்றது.
உருளைக் கிழங்குத் தாவரம் நிழற்செடி (nightshade) குடும்பத்தைச் சேர்ந்தது.
அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உலகில் நான்காவதாக அதிகம் பயிர் செய்யப்படும் செடியினமாகும்.
இன்றைய பெரு நாட்டுப் பகுதியே உருளைக் கிழங்கின் தாயகம் எனப்படுகிறது.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட உருளைக்கிழங்கு ஜூஸில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
உருளைக்கிழங்கு ஜூஸ்
1. வீக்கத்தைக் குறைத்து, சருமத்தை பிரகாசமாகவும் இறுக்கமாகவும் மாற்ற பச்சை உருளைக்கிழங்கு சாற்றை கண்களுக்கு அடியில் தடவி வந்தால் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கக்கூடும்.
2. கரும்புள்ளிகள், கண்களுக்குக் கீழே உள்ள கருவளையம் மற்றும் Hyper pigmentation போன்றவற்றில் இருந்து விடிவுபெறவும் இந்த உருளைக்கிழங்கு சாறானது உதவுகிறது.
3. உச்சந்தலையில் இந்த உருளைகிழங்கு சாற்றினை தடவி 20-30 நிமிடங்கள் வைத்தால் உங்களது முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுவது மட்டுமின்றி தடிப்புத் தோல் அழற்சி, பொடுகு மற்றும் முன்கூட்டிய நரை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும்.
4. அரிப்பு,தோல் அழற்சி போன்றவற்றில் இருந்து விடிவுபெற 10-15 நாட்களுக்கு தொடர்ந்து உருளைக்கிழங்கு சாற்றை தடவி வரவேண்டும்.
5. இந்த உருளைக்கிழங்கு சாறானது யூரிக் அமில அளவை குறைக்கக்கூடியது. அதுமட்டுமின்றி இது பெரும்பாலான யூரிக் அமிலத்தை உடைக்கக்கூடியது என்றும் தெரியவந்துள்ளது.
6. வளர்சிதை மாற்றம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்க இந்த உருளைக்கிழங்கில் உள்ள 50% மேற்பட்ட வைட்டமின்-சி, மற்றும் இரும்புச்சத்து உதவுகிறது.