எரிவாயு சம்பந்தமான சிக்கல்கள் இருக்குமாயின் 1311 என்ற அவசர இலக்கத்துக்கு அழைக்குமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் எரிவாயு கசிவு தொடர்பான மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் நிபுணர் குழு அறிக்கை, நுகர்வோர் விவகார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷாந்த வல்பொலகே இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்று வரும் எரிவாயு விபத்துக்கள் தொடர்பான அறிக்கைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குழு ஒன்றை நியமித்துள்ளார்.
வர்த்தக மற்றும் விற்பனை நிலையங்களில் எரிவாயு (LPG) சிலிண்டர் தீ விபத்துக்கு உள்ளாகின்றமை, வெடிப்புகள் ஏற்படுகின்றமைக்கான காரணங்களை ஆராய்ந்து தீர்வுகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி குறித்த குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.