எரிபொருள் விலை உயர்வு காரணமாக பஸ் உரிமையாளர்களுக்கு சிறப்பு நிவாரணம் அறிமுகப்படுத்தப்படுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலம் அமுனுகாமா கூறினார்.
மேலும் எந்தவொரு காரணத்திற்காகவும் பஸ் கட்டணத்தில் அதிகரிப்பு இருக்காதென்றும் தெரிவித்தார்.
அத்தோடு எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வாக நிவாரண தொகுப்பு அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார்.
மேலும் இது தொடர்பாக பஸ் உரிமையாளர்களுடன் இந்த வாரம் சிறப்பு கலந்துரையாடல் நடத்தப்படுமென்றும் தெரிவித்தார்.
அத்தோடு பஸ் கட்டணத்தை அதிகரிக்காமல் பஸ் வேவைக்கு சாத்தியமான ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கப்படுமென்று அவர் கூறினார்.