டி 20 தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான வெற்றிக்கு பின்னர், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி, நடிகை அனுஷ்கா ஷர்மா ஆகியோர் நேற்று விமான நிலையத்தில் தங்கள் மகள் வாமிகாவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகிவிட்டன.
கோலி, அனுஷ்கா சர்மா மற்றும் வாமிகா ஆகியோரின் இந்த புகைப்படங்களை பல நெட்டிசன்கள் பகிர்ந்துள்ளனர், மேலும் இந்த ஜோடி சாதாரண மனிதர்களைப் போல நடந்து கொண்டதற்காக பாராட்டியுள்ளனர். புகைப்படங்களில் கோலி சாமான்களையும், அனுஷ்கா வாமிகாவையும் வைத்திருக்கிறார்கள்.ஒரு சிலர் என்ன தான் கேப்டன் ஆக இருந்தாலும் வீட்டுக்கு ..?என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
ஜனவரி 11 ஆம் தேதி கோலி மற்றும் அனுஷ்கா ஒரு பெண் குழந்தை பிறந்தது. கிரிக்கெட்டைப் பொருத்தவரை, இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 ஐ தொடரில் கோலி ஃபார்ம் அடித்தார், அங்கு அவர் மூன்று அரைசதம் உட்பட ஐந்து போட்டிகளில் 231 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.