எதிர்கட்சி தலைவரை பின்பற்றி அரசாங்கம் மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமா சந்திரா பிரகாஸ் (Uma Chandra Pragas) தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (07.01) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்கட்சி என்ற வகையில் அரச பலம் இல்லாமல் மக்களுடைய குறைகளை கேட்பது தான் எங்களுடைய வேலை. அதன் ஒரு கட்டமாக தான் வவுனியாவில் எதிர் கட்சி தலைவர் பல செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.
அரசிடம் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம். எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவிடம் (Sajid Premadasa) இருந்து பல பாடங்களை கற்றுக் கொள்ளுங்கள். எதிர்கட்சி தலைவரை பின்பற்றி மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம். இதற்காக அழுத்தம் கொடுக்க வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தியாகிய எமது கட்சிக்குள் இனம், மதம், மொழி பேதம் கிடையாது. நாம் மக்களுக்காக ஒன்றிணைந்து மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.