உள்ளுராட்சி சபை தேர்தலை பிற்போடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை பிற்போட்டுள்ளது.
மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஓய்வுபெற்ற கேர்னல் விஜேசூரிய தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றில் இன்று இடம்பெற்ற போதே மனு மீதான விசாரணை பிற்போடப்பட்டது.