உலக மரபுரிமை போட்டியில் 1ம், 3ம் இடத்தை பெற்று யாழ் பல்கலைக்கழக கலாசார சுற்றுலாத்துறை மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உலக மரபுரிமை தினத்தை முன்னிட்டு “நிலையான நல்லிணக்கமுள்ள உலகிற்கான மரபுப்பாடங்கள்” என்ற கருப்பொருளில் நடாத்திய பன்னாட்டுக் கட்டுரை மற்றும் சொற்பொழிவுப் போட்டியில் முப்பத்தேழு போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இதில் இலங்கையைச் சார்ந்து பங்குபற்றிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலாசார சுற்றுலாத்துறை மாணவர்களான மகேந்திரநாதன் மோகனதாரணி முதலாம் இடத்தையும் T.சாலரன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
அதேவேளை யாழ் பல்கலைக்கழகத்தில் சுற்றுலாத்துறையினை தடை செய்வதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மாணவர்கள் துறைசார் பேராசிரியர்களின் முயற்சியினால் கலாசார சுற்றுலாத்துறை தொடர்ந்தும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.