பொதுவாகவே உலகில் அனைவரும் தம்முடன் இருப்பவர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.ஆனால் சின்ன சின்ன பொய்கள் ஏமாற்றங்கள் கூட உண்மையான உறவில் பெரிய விரிசலை ஏற்படுத்திவிடும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிகளை சேர்ந்தவர்கள் உறவில்கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் ஈகோ பார்க்காமல் உடனே மன்னிப்பு கேட்கும் குணம் கொண்டவர்கள். இப்படி உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோதிடம் தனிப்பட்ட ஆளுமையை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு நபரின் குணாதிசயங்களும் ராசி அறிகுறிகளுடன் ஒத்துப்போகின்றது என ஜோதிட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். சிலர் உறவுகளை அதிகம் மதிக்கிறார்கள். அவர்கள் தங்கள் பிணைப்பைக் காப்பாற்ற தங்களைத் தாழ்த்திக் கொள்ளத் தயங்க மாட்டார்கள். உறவை காப்பாற்றிக்கொள்ள இவர்கள் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டார்கள்.
மேஷம்
இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் உணர்ச்சிவசப்படும் இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். இருப்பினும், எந்தச் சூழ்நிலையை எதிர்கொண்டாலும், எவ்வளவு மோதல்கள் வந்தாலும், விரைவாகத் தீர்வைப் பற்றி யோசிப்பார்கள்.
ஈகோ பார்க்காமல் உறவை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இவர்களிடத்தில் மேலோங்கி இருக்கும்.
துலாம்
இந்த ராசிக்கு அதிபதி சுக்கிரன். அன்பும் சமநிலையும் அவர்களின் குணாதிசயம்.
துலாம் ராசிக்காரர்கள் ராஜதந்திரிகள். அவர்கள் கருத்து வேறுபாடு மற்றும் அதிருப்தியை வெளிப்படுத்துவதை எளிதாக உணர வைக்கும் ஆளுமை கொண்டவர்கள்.
துலாம் ராசியினருக்கு நல்லிணக்கத்திற்கான உண்மையான விருப்பம் உள்ளது, சமநிலையை பராமரிப்பது அவர்களின் உறவுகளின் நல்வாழ்வுக்கு முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்வதுடன், மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிலையில் சற்றும் தயங்காமல் மன்னிப்பு கேட்பார்கள்.
மீனம்
இந்த ராசியை சேர்ந்தவர்கள் உணர்ச்சிகரமான ஆளுமை உடையவர்கள். கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் உடனே மன்னிப்பு கேட்கும் குணம் அவர்களிடம் உள்ளது.
மற்றவர்களிடம் நேர்மையாக மன்னிப்பு கேட்டு, அவர்களின் உறவைத் தொடரவும். அவர்கள் எந்த சூழ்நிலையிலும் மன்னிப்பு கேட்டு சமரசம் செய்யவும் தயங்க மாட்டார்கள்.