உர இறக்குமதி தொடர்பான தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அத்துடன், அரசாங்கம் என்ற ரீதியில் சேதன விவசாயத்தில் ஈடுபடுவோருக்கு மாத்திரமே நிவாரணங்கள் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.