கல்குவாரி கொள்ளையில் ஈடுபட்ட லொறிகளை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உயிரைப்பற்றிக்கூட கவலைப்படாமல் மடக்கி பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.நாம் தமிழர் கட்சியின் நத்தம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், கட்சியின் மாநில கொள்கைபரப்புச் செயலாளருமான சிவசங்கரனே வாகனங்களை மடக்கி பிடித்துள்ளார்.
தனது தொகுதியில் பல ஆண்டுகளாக நடக்கும் கல்குவாரி கொள்ளை குறித்து அரசிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் சிவசங்கரனே லொறிகளை சிறைபிடித்து ஒப்படைத்துள்ளார்.அவர் வெளியிட்ட வீடியோவில், கட்சி உறுப்பினர்கள் சிலருடன் களத்திற்கு நேரடியாகச் சென்ற சிவசங்கரன், கல்குவாரியிலிருந்து முறைகேடாகக் கற்களை ஏற்றி வந்த வாகனங்களைச் சிறைப் பிடித்துள்ளார்.
பின்னர், தகவல் தெரிவித்து சம்பவயிடத்திற்கு அதிகாரிகளுக்கு வரவைத்து பொதுமக்கள் முன்னிலையில் லொறியுடன் கொள்ளையர்களை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
அரசிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் களத்திற்கு நேரடியாகச் சென்று முறைகேடாகக் கற்களை ஏற்றி வந்த வாகனங்களைச் சிறைப் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தார் நாம் தமிழர் கட்சியின் நத்தம் தொகுதி வேட்பாளர் முனைவர் சிவசங்கரன்.#வெல்லப்போறான்விவசாயிhttps://t.co/f4NSumZf5q
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) March 13, 2021