நாட்டின் பல்வேறு கடற் கரைகளிலும் இறந்த நிலையில் கடல்வாழ் உயிரினங்கள் சில இன்று மீட்கப்பட்டுள்ளன.
கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பிடித்து மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகிறது.
மன்னார்-முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கரடிக்குளி கடற்கரை பகுதியில் எரி காயங்களுடன் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று இன்று காலை கரை யொதுங்கியுள்ளது.
அண்மைக்காலமாக மன்னார் மாவட்டத்தில் தாழ்வுபாடு,வங்காலை மற்றும் சிலாபத்துறை கடற்கரை பகுதிகளில் உயிரிழந்த நிலையிலும்,கடுமையான சேதங்களுடனும் கடலாமைகள் கரை ஒதுங்கியுள்ளது.
மேலும் மட்டக்களப்பு தாழங்குடா கடற்கரை பகுதியில் டொல்பின் மீன் இனம் ஒன்று உயிரிழந்த
நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
சுமார் ஐந்து அரை அடி நீளம் உள்ள டொல்பின் மீன் இனமே இவ்வாறு இறந்த நிலையில் கரை
ஒதுங்கியுள்ளதாக பிரதேச மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.