எடை இழப்பு என்பது பல சிக்கலான செயல்முறைகளை உள்ளடக்கியது. உணவுமுறை மாற்றங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் முதல் உடற்பயிற்சி வரை, அனைத்தும் அவரவர் உடலமைப்பைப் பொறுத்து கண்டறியப்பட வேண்டும்.
சரியான உணவு மற்றும் பானங்களின் கலவை எடையை குறைக்க உதவுகிறது.
சமையலறையில் இருக்கும் மசாலாப் பொருட்களில் பல நமக்கேத் தெரியாமல் நமது எடையைக் குறைக்க உதவுகிறது.
சோம்பு அல்லது பெருஞ்சீரகம் விதைகள், வீட்டு மசாலாப் பொருட்களில் ஒரு முக்கிய பொருளாகும். இது பல மருத்துவ நன்மைகளை வழங்குகிறது. ஆயுர்வேதம் சோம்பு விதைகளை அதன் பல நன்மைகளுக்காக பரிந்துரைக்கப்படுகின்றது.
சோம்பு எப்படி எடையைக் குறைக்க உதவுகிறது?
சோம்பு அல்லது பெருஞ்சீரக விதைகள் ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து மற்றும் தாதுக்களின் வளமான மூலமாகும்.
ஊட்டச்சத்துக்களின் சக்தியாக விளங்கும் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் கூடுதல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
கூடுதல் கொழுப்பைக் குறைக்கும்
சோம்பு அல்லது பெருஞ்சீரகம் பல ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். இது உடலில் இருக்கும் கொழுப்பின் அளவைக் குறைக்கவும், உடலில் உள்ள மற்ற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் உதவுகிறது.
வயிற்றை நிறைவாக வைத்திருக்கிறது
பெருஞ்சீரகம் விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் பசியைக் குறைக்க உதவுகிறது.
செரிமானத்தை ஊக்குவிக்கிறது
நார்ச்சத்து நிறைந்த மசாலாப் பொருளாக இருப்பதால் இது சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் செரிமான நொதிகளின் உற்பத்திக்கு உதவுகிறது.
நச்சுக்களை நீக்குகிறது
பெருஞ்சீரகம் விதைகள் ஆக்ஸிஜனேற்றத்தின் நல்ல மூலமாகும் அவை உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும்.
இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் அதனால் ஏற்படும் சேதத்தையும் குறைக்கிறது.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது
பெருஞ்சீரக விதைகள் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இது ஆற்றலை விரைவாக செயலாக்க உதவுவதோடு அதிகளவு கொழுப்பை எரிக்கிறது.