தனது மூக்கு, காது, உதடு மற்றும் நாக்குகளை அறுத்துக்கொண்டு தன்னை வேற்று கிரக வாசியாக உருமாற்றிக்கொண்டுள்ள இளைஞர் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறார்
பிரித்தானியாவில் பார்ப்பதற்கே விசித்திரமாக, அறுக்கப்பட்ட சிறிய காதுகள், மூக்கு, வெட்டப்பட்ட உதடுகள் மற்றும் இரண்டாக பிளக்கப்பட்ட நாக்குடன் ஹாலிவுட் படங்களில் சித்தரிக்கப்படும் ஏலியன் போன்று தன்னை முழுவதுமாக உருமாற்றிக்கொண்டுள்ளார் 32 வயதான Anthony Loffredo
பயங்கரமாக தோற்றமளிக்கும் அவர் தனக்கு தானே வைத்துக்கொண்ட பெயர் ‘Black Alien’ பெயருக்கு ஏற்ப கண்கள் உடன்பட அவரது உடல் முழுவதிலும் டாட்டூ வரைந்துகொண்டு கருப்பாக மாறியுள்ளார்
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக தன்னை உருமாற்றம் பணியில் அவர் ஈடுபட்டுவந்துள்ளார் அதற்கு அவர் வைத்த பெயர் Black Alien Project
ஒவ்வொரு முறை சிறு சிறு மாற்றங்களை செய்துவந்த Loffredo, அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுவந்துள்ளார் இதனால் அவருக்கு 345,000 ஃபாலோவர்ஸ் குவிந்துள்ளனர்
View this post on Instagram