வீட்டில் கணவன், மனைவிகளுக்கு இடையே வரும் சண்டைகளில் பெரும்பாலும், அவர்களின் தாம்பத்திய வாழ்க்கை சரியில்லாததாலே ஏற்படுகிறது. தம்பதிகளுக்குள் உடலுறவு சரியாகவும், மகிழ்ச்சியாகவும் அமைந்து விட்டால், அவர்களுடைய வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்பு மிககுறைவு. உடலுறவை ஐந்து அல்லது பத்து நிமிட செயல்கள் மட்டுமே என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். அது தவறான பார்வை. தம்பதிகள் இணைந்து உங்கள் உடலுறவை மேலும் மகிழ்ச்சியாக்க சில புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும்.
நீண்டகால உறவில் உள்ள சில தம்பதிகள் ஓரே மாதிரியாக உடலுறவு கொள்வதால், உடலுறவில் சலிப்பு ஏற்படலாம். ஒரே மாதிரியாக முயற்சி செய்வதை முதலில் கைவிடவேண்டும். புதிது புதிதாக பல விஷயங்களை உடலுறவில் செய்யும்போது கூடுதல் சுவாரஸ்யங்கள் உங்களுக்கு கிடைக்கும். இது சம்பந்தமாக எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், படுக்கையறையில் கூடுதல் சுவாரஸ்யம் அடைவதற்கான சில விஷயங்களை இங்கே கொடுத்துள்ளோம்.
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பெண்கள், ஆண்கள் என இருவருக்கும் செக்ஸ் டாய்ஸ் இருக்கின்றன. உடலுறவில் திருப்தியில்லை என்றால், சிலர் செக்ஸ் டாய்ஸ் உபயோகப்படுத்துகிறார்கள். உங்கள் துணைக்கு செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்த ஆர்வமாக இருந்தால், அதை ஏன் முயற்சி செய்யக்கூடாது? நீங்கள் அதை ரசிக்கவில்லை என்றாலும், “நீங்கள் அந்த டாய்ஸை விட மிகவும் சிறந்தவர்” என்று உங்கள் துணையிடம் எப்போதும் சொல்லலாம். இது அவருக்கும் மகிழ்ச்சியை தரும்.
உடலுறவு என்பது வெறும் படுக்கையறையில் இரவு தொடங்குவது மட்டும் அல்ல. காலையில் எழுந்ததிலிருந்து நீங்கள் அதே எண்ணத்தில் சின்ன சின்ன குறும்புகள் உங்கள் மனைவியிடம் செய்யலாம். இரவு வீட்டிற்கு வந்ததும், சிறிய தொடுதலிருந்து உங்களுடைய தாம்பத்தியத்தைத் தொடங்குங்கள். ஃபோர்ப்ளேவில் அதிகம் ஈடுபடுவதற்கு உங்களுக்கோ அல்லது உங்கள் மனைவிக்கோ அதிக ஈடுபாடு இருந்தால், அதிக நேரம் ஃபோர்ப்ளேவில் ஈடுபடுங்கள். இது உங்களை நெருக்கமாகவும் அன்பாகவும் உணர வைக்கும்.
காண்டம் என்று அழைக்கப்படும் ஆணுறை, அத்தியாவசியமான பயன்பாட்டுப் பொருளாகும். ஆணுறை பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானது. நீங்கள் உடலுறவில் புதிதாக ஒன்றை முயற்சிக்க விரும்புகிறீர்கள் என்றால், வெவ்வேறு வகையான ஆணுறைகளைப் பயன்படுத்த தயாராக இருப்பார்கள். இதை பல ஆண்கள் விரும்புவார்கள். ஏனெனில் இது மிகவும் எளிமையான விஷயம்.
வேறொரு அலங்காரத்தில் அல்லது செக்ஸியான உடையில் உங்கள் மனைவியை பார்ப்பது உங்களை மிகவும் கவரும். காஸ்ப்ளே ஆடைகளைப் பயன்படுத்துவது உறவின் ஆரம்ப கட்டங்களில் நீங்கள் பயன்படுத்திய உணர்வை மீட்டெடுக்க முடியும். காஸ்ப்ளேயில் எல்லாவற்றையும் வெளியேற்றுவது உங்களுக்கு இன்னும் சங்கடமாக இருந்தால், சில கவர்ச்சியான உள்ளாடைகள் அல்லது முழங்கால் சாக்ஸ் போன்றவற்றுடன் நீங்கள் விஷயங்களை மெதுவாக தொடங்கலாம்.
பொதுவாக உடலுறவின்போது, தங்கள் விருப்பங்களைச் சொல்லப் பெண்கள் தயங்குகிறார்கள். கணவன்மார்கள் அவர்களது மனைவிகளிடம் இதுதொடர்பாக பேச வேண்டும். உங்கள் மனைவி விரும்புவதை முதலில் நீங்கள் அறிந்துகொண்டு அவ்வாறு அவருக்குச் செய்யுங்கள். உடலுறவில் கூடுதல் சுவாரஸ்யத்தை இருவரும் அனுபவிப்பீர்கள். இது உங்கள் உறவை மேலும் வலுப்படுத்தும்.
தம்பதிகள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து ஆபாசப் படங்களைப் பார்க்கலாம். பின்னர் அது போன்று நீங்கள் முயற்சிக்கலாம். நீங்கள் எதை முயற்சிக்க விரும்புகிறீர்கள் என்பதை இருவரும் உங்களுக்குள் தெரியப்படுத்துங்கள். உங்களிடம் இருக்கும் சிறந்த செயலை நீங்கள் கண்டறியலாம். இருவரும் ஒன்றாக ஆபாசப் படம் பார்க்கும்போது, பெண்கள் தாங்கள் விரும்புவதை அல்லது விரும்பாததை சுட்டிக்காட்டுவார்கள். அதன் மூலம் ஆண்கள் புரிந்துகொள்ளலாம். மேலும், ஆண்கள் விரும்புவதையும் பெண்கள் புரிந்துகொள்ளக்கூடும்.
உடலுறவை எப்போதும் ஆண்கள் தொடங்க வேண்டும் என்றில்லை. பெண்களும் தொடங்கலாம். உடலுறவின்போது மனைவி ஆதிக்கம் செலுத்துவதை எந்த கணவன் மிகவும் விரும்புவார். உடலுறவின்போது ஆண்கள் சோர்வடைந்துவிட்டால், பெண்கள் அந்த இடத்தில் தொடங்கலாம். உடலுறவின் போது மிகவும் தீவிரமாக ஈடுபட பெண்கள் முயற்சி செய்யலாம். உங்கள் கணவர் மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்படலாம்.
கண்களை துணியால் மூடிக்கொண்டும் மற்றும் கைகளை கட்டிக்கொண்டும் உடலுறவில் ஈடுபடலாம். சில நேரங்களில் கண்மூடித்தனமாக மிகவும் மென்மையாகவும் செயல்படலாம். இது உங்களுக்குக் கூடுதல் சுவாரஸ்யத்தை அளிக்கும். இதை இருவரும் மாறிமாறி முயற்சி செய்யலாம். குளியலறை, படுக்கையறை, ஹால் என வீட்டின் அனைத்து இடங்களிலும் நீங்கள் இருவரும் செயல்படலாம்.
வாழ்க்கையை இருவரும் ஒன்றாக பகிர்ந்துகொள்வதுபோல படுக்கையறையிலும் இருவரும் இணைந்து புதிய புதிய செயல்களில் ஈடுபடலாம். உங்களுடைய சலிப்பான உடலுறவை விடுத்து உங்கள் துணையை எவ்வாறு மகிழ்ச்சியடையச் செய்யலாம் என்று புதிதாக முயற்சி செய்யுங்கள். உங்கள் துணையின் மகிழ்ச்சியின் மீது நீங்கள் அக்கறை செலுத்தும்போது, கூடுதல் சுவாரஸ்யம் கண்டிப்பாக கிடைக்கும். உங்கள் உறவும் மகிழ்ச்சியாக வலுவாக இருக்கும்.