ஆனி மாத சங்கடஹர சதுர்த்தி இந்த ஆண்டில் 06ஆம் மாதம் 25 திகதிசெவ்வாய்கிழமை வருகிறது. அன்று காலை 03.26 மணி துவங்கி, ஜூன் 26ம் திகதி அதிகாலை 01.25 வரை சதுர்த்தி திதி உள்ளது.
ஜூன் 25ம் திகதி நாள் முழுவதுமே சதுர்த்தி திதி இருப்பதால் இந்த பரிகாரத்தை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.
இருந்தாலும் காலையில் செய்வது சிறப்பு. இந்த நாளில் ஒரு குறிப்பிட்ட பரிகாரத்தை செய்வதால் உங்களுடைய வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அது நிறைவேறும்.
இந்த பரிகாரத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இதை உங்களுக்காகவோ அல்லது குடும்பத்தில் இருப்பவர்களுக்காகவோ அல்லது மற்றவர்களுக்காகவோ செய்யலாம்.
இது போல் தொடர்ந்து 11 நாட்கள் விநாயகரின் உருவத்தின் மீது கீழிருந்து மேலாக சந்தன பொட்டினை ஓம் வடிவத்தில் வைக்க வேண்டும்.
நீங்கள் வைக்கும் பொட்டு 11 வது நாளில் விநாயகரின் துதிக்கையில் முடியும். நீங்கள் வைத்த பொட்டுக்களை இணைத்தால் ஓம் வடிவம் வரும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
சங்கடஹர சதுர்த்தி அன்று மட்டும் கொழுக்கட்டை, சுண்டல் படைத்தால் போதும். அடுத்த நாள் நைவேத்தியம் எதுவும் படைக்க வேண்டிய அவசியம் கிடையாது.
இந்த பரிகாரத்தை தொடர்ந்து 11 நாட்கள் செய்து, உங்களின் வேண்டுதலை தினமும் விநாயகரிடம் மனம் விட்டு கூறி, அவருக்குரிய மந்திரத்தை சொன்னால் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.
ஒருவேளை உங்களுடைய கெட்ட நேரம், கர்மவினை ஆகியவற்றின் காரணமாக அந்த வேண்டுதல் நிறைவேறவில்லை என்றால், அடுத்து வரும் சங்கடஹர சதுர்த்தி துவங்கி, மீண்டும் 11 நாட்கள் சந்தன பொட்டு வைத்து வழிபடுங்கள். உங்களின் வேண்டுதலை விநாயகர் நிச்சயம் நிறைவேற்றி வைப்பார்.
சங்கடஹர சதுர்த்தி அன்று காலையில் எழுந்து, குளித்து விட்டு, பூஜை அறையில் இருக்கும் விநாயகர் படத்தை எடுத்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.
விநாயகரை மனதார வழிபட்டு விட்டு, உங்களுடைய வேண்டுதல் எதுவோ அதை விநாயகரிடம் மன விட்டு சொல்லுங்கள்.
பிறகு சிறிது சந்தனத்தை எடுத்து தண்ணீர் அல்லது பன்னீரில் கலந்து விநாயகரின் பாதத்தில் ஒரு பொருட்டு வையுங்கள். அதன் மீது குங்கும பொட்டும் வையுங்கள். பொட்டு வைத்து விட்டு, “ஓம் விக்னங்களை போக்கும் விநாயகா போற்றி” என்ற மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள்.
விநாயகருக்கு கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.
சங்கடஹர சதுர்த்திக்கு மறுநாள் அதே போல் காலையில் எழுந்து குளித்து விட்டு, விநாயகரின் பாதத்திற்கு மேல் ஏற்கனவே முந்தைய நாள் வைத்த சந்தன பொட்டிற்கு கொஞ்சம் மேலாக மற்றொரு சந்தன பொட்டு வைத்து, அதே போல் மந்திரத்தை சொல்லி வழிபடுங்கள்.