ஈரானில் இஸ்ரேலின் பணி இன்னும் முடிவடையவில்லை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில், “எனது வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் எங்களது அனைத்து அமைப்புகளும் ஈரானிய ஆட்சியை வீழ்த்துவதற்காகவே செயல்பட்டு வருகின்றன” என்று என அவர் கூறியுள்ளார்.
இதன்போது, ஈரானிய ஆட்சியை வீழ்த்துவதற்கு அதனுடன் நேரடியாக மோதுவதே தனது நோக்கம் என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் அறிவிப்புக்கு பதில்
ஈரானுடனான போர் மீண்டும் தொடங்குவது குறித்து இஸ்ரேல் கவலைப்படத் தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சில மணிநேரங்களிலேயே நெதன்யாகுவின் மேற்கொண்டு கருத்து வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில நாட்களாக இடம்பெற்ற மோதல்களில் இஸ்ரேலுக்குப் பங்கிருப்பதாக தகவல்கள் வெளியாகவில்வை என்பது குறிப்பிடத்தக்கது.

