யாழ் பருத்துறை – சுப்பர்மடம் பகுதியில் கடற்கரை கொட்டிலில் படுத்துறங்கிய இளைஞனை இ ரும்பு கம்பிகளால் தாக்கியதுடன் காலில் பிடித்து வீதியில் இழுத்து சென்ற கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளதுசம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபர்கள் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது
பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் நேற்று பிப 03 அதே பகுதியை சேர்ந்த 22 வயதுடைய ஜெகதீசன் றீகன் என்ற இளைஞன் கடற்கரை கொட்டிலில் படுத்துறங்கிக் கொண்டிருந்த நிலையில்,அங்குவந்த 3 பேர் கொண்ட கும்பல் இரும்பு கம்பிகளால் மூர்க்கத்தனமாக தாக்கியதுடன் மயங்கி கிடந்த இளைஞனின் காலை பிடித்து வீதியால் இழுத்து சென்றுள்ளனர்
முன் பகையின் காரணமாகவே இந்த கொடூரத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுதாக்குதலுக்கு இலக்கான இளைஞனின் கை மற்றும் கால்கள் முறிந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதாக அப் பகுதி மக்கள் தெரிவித்தனர்குறித்த தாக்குதல் தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்