மன்னர் முடிசூட்டு விழாவில் இளவரசி சார்லோட் செய்த சில செயல்களை வைத்து, அவரை அரச குலத்தின் ரகசிய ஆயுதம் என அமெரிக்க கட்டுரையாளர் புகழ்ந்துள்ளார்.
பிரித்தானியாவில் மூன்றாம் மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் அரச குடும்பத்தை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் 8 வயது சிறுமியான இளவரசி சார்லோட், மூன்று நாள் நடைபெற்ற மன்னர் முடிசூட்டு விழாவில், தனது பெற்றோர் மற்றும் இரண்டு சகோதரர்களோடு கலந்து கொண்டு தன்னுடைய செய்கையால் அனைவரையும் ஈர்த்துள்ளார்.
முடிசூட்டு விழாவில் தனது தந்தை உரையாற்றும் போது, சார்லோட் அவர் பேசுவதை போலவே வாயை அசைத்து குறும்புகள் செய்தார்.
மேலும் விழாவில் சிறுமி எல்லோரிடமும் சகஜமாக பேசி பழகும் செயல்களை பார்த்து அவரை ராயல் கட்டுரையாளர்கள் பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் ராயல் கட்டுரையாளர் ஏன்செலா மொல்லர்ட்
”முடிசூட்டு விழாவில் வேல்ஸ் இளவரசியின் கவர்ச்சி மற்றும் இளவரசர் லூயிஸ் அறிமுகப்படுத்திய புதிய அரச அலை ஆகியவற்றின் மீது அனைவரும் கவனம் செலுத்தியதால், சார்லோட்டை யாரும் கவனிக்கவில்லை.”
“சார்லோட் அடுத்த வாரிசாக எதிர்ப்பாக்கப்படுபவர் அல்ல, ஆனால் இளவரசி சார்லோட் தன்னை அரச குடும்பத்தின் ரகசிய ஆயுதம் என்று வெளிப்படுத்தியுள்ளார்.”
இப்போதைக்கு, சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, சாதாரண குழந்தைப் பருவத்தை அனுபவித்து வருகிறார், ஆனால் எதிர்பார்த்தபடி, இளவரசி அன்னேவை போல பாவனைகளும், அவரது தாய் மற்றும் பாட்டியை போல தைரியமானவளாகவும் இருக்கிறாள். ” என சார்லோட்டை ஏன்செலா மொல்லர்ட் புகழ்ந்துள்ளார்.