பிரித்தானியாவில் சில நாட்களுக்கு முன் காணாமல் போன Sarah Everard என்ற ஒரு இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு இன்னமும் அடங்கவில்லைஇந்நிலையில், மீண்டும் காணாமல் போன ஒரு இளம் பெண்ணும் குழந்தையும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
இம்மாதம் 1ஆம் திகதி Gloucestershireஇல் வசித்துவந்த Bennylyn Burke (25) என்ற இளம் பெண்ணும் Jellica (2) என்ற குழந்தையும், பெயர் வெளியிடப்படாத மற்றொரு குழந்தையும் காணாமல் போனதாக பொலிசாருக்கு புகாரளிக்கப்பட்டுள்ளது
Bennylyn இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிலிப்பைன்ஸிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்ததாக கூறப்படுகிறது கடைசியாக Bennylyn மற்றும் குழந்தைகள் பிப்ரவரி 17ஆம் திகதி காணப்பட்டுள்ளார்கள் அதற்குப் பிறகு அவர்களை யாரும் பார்க்கவில்லை
பொலிசார் பிரித்தானியா முழுவதும் அவர்களை வலைவீசித் தேடிவந்த நிலையில், ஸ்காட்லாந்திலுள்ள Dundee என்ற இடத்தில் Andrew Innes (50)என்பவருக்கு சொந்தமான வீட்டில் Bennylynம் Jellicaவும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்கள்
காணாமல் போன Bennylynஇன் மற்றொரு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளாள் மென்பொறியாளரான Andrew கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார் கொலைக்கான காரணம் எதுவும் தெரியாத நிலையில், Bennylynமற்றும் Jellicaவின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பட்டுள்ளன