ஆண், பெண் என இருவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.
இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
நரைமுடியை இயற்கையான முறையில் கருப்பாக மாற்ற இந்த காபி ஹேர்பேக் பயனுள்ளதாக இருக்கும்.
காபித்தூள் இயற்கையான பொருள் என்பதால் தீங்கு விளைவிக்காதது. இதை தயக்கமில்லாமல் பயன்படுத்தலாம்.
வாரம் இரண்டு நாட்கள் இதை செய்து வருவதன் மூலம் இளநரை முடி படிப்படியாக இழந்த நிறத்தை பெறும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று எல்லோரும் பயன்படுத்தலாம்.
காபித்தூள் முடி சாயத்துக்கு ஏற்ற ஒன்று. நரைமுடியை பழுப்புநிறமாக மாற்றுகிறது, முடி உச்சந்தலைக்கு ஊட்டமளிப்பதால் முடி வளரவும் செய்கிறது.
தேவையான பொருட்கள்
- காபித்தூள் – 2 ஸ்பூன்
- நெல்லிக்காய் தூள் – 1 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 3 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
ஒரு சிறிய கிண்ணத்தில் காபித்தூள், நெல்லிக்காய் பொடி எடுத்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இவை இரண்டும் சேர்ந்து பேஸ்ட் போல் குழைக்க தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
பிறகு மெல்லிய துணியில் அதை வடிகட்டி கொண்டால் பேஸ்ட் தயார்.
பயன்படுத்தும் முறை
கூந்தலுக்கு ஊட்டச்சத்தை அளிக்க முடியின் வேர்கள் மற்றும் உச்சந்தலை அனைத்திலும் இவற்றை பயன்படுத்துங்கள்.
பிறகு 40 நிமிடங்கள் கழித்து முடியை நீரில் அலசி எடுங்கள்.