தலைமுடிக்கு செம்பருத்து செய்யும் அற்புதத்தினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக இன்றைய தலைமுறையின பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று தான் முடி சம்பந்தமான பிரச்சனை.
ஆம் முடி கொட்டுதல், பொடுகு, பேன் தொல்லைகள், முடி பொலிவு இல்லாமை, முடி வளர்வதில் சிரமம் என்று கூறிக்கொண்டே செல்லலாம்.
ஆனால் இதற்கு மருந்தகங்களில் பலவித ஷாம்பு, எண்ணெய்கள், கண்டிஷ்னர் விற்கப்பட்டு வரும் நிலையில், இயற்கை முறையில் இந்த பிரச்சனையை எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
செம்பருத்தி எண்ணெய், தலைமுடி பராமரிப்பில் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் ஒரு இயற்கை பொருள். இது முடியை நீளமாகவும், கருமையாகவும் வளர்க்க உதவும் என்பது உண்மைதான்.
செம்பருத்தி எண்ணெய்யின் நன்மைகள்:
செம்பருத்தியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடியின் வேர்களை வலுப்படுத்தி புதிய முடி வளர்ச்சியை அதிகரிக்கின்றது.
முடி உதிரும் பிரச்சனை இருப்பவர்கள், செம்பருத்தி எண்ணெய் பயன்படுத்தினால், முடியின் வேர்களை வலுப்படுத்துவதுடன், முடி அடர்த்தியாகவும் வளர்கின்றது. முடி உதிர்வும் தடுக்கப்படுகின்றது.
செம்பருத்தியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடியின் நிறத்தை பாதுகாத்து இளநரையை வரவிடாமல் தடுக்கின்றது.
இந்த செம்பருத்தி எண்ணெய்யானது இயற்கையாகவே முடியை கண்டிஷன் செய்து முடியை பளபளப்பாக மாற்றுகின்றது.
மேலும் தலையை ஈரப்பதமாக வைத்து, தோல் அரிப்பு மற்றும் பொடுகு தொல்லை ஏற்படாமல் செம்பருத்தி எண்ணெய் தடுக்கின்றது.
செம்பருத்தி எண்ணெய்யை சிறிதளவு சூடாக்கி, தலையோட்டில் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து, முடியின் வேர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்கின்றது.
இதே போன்று முடி முழுவதும் இந்த செம்பருத்தி எண்ணெய்யை தடவி, ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்பு ஷாம்பு போட்டு முடியை சுத்தம் செய்யவும்.
செம்பருத்தி பொடி, தேன், முட்டை போன்றவற்றுடன் கலந்து பேக் செய்து முடியில் தடவலாம். ஆனால் செம்பருத்தி எண்ணெய் ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.
எண்ணெய்யை பயன்படுத்துவதற்கு முன், ஒரு சிறிய பகுதியில் பரிசோதனை செய்து பார்க்கவும்.